Tue October 16, 2018

அனுதின மன்னா

அனுதின மன்னா - Oct16

 


தியானம்

நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள். (ஏ 12.3)

ஆம். தாகமாயிருக்கிறவர்கள் ஊற்றுகளைக் கண்டுபிடித்து தண்ணீர் மொண்டு கொள்ளும்போது மகிழ்ச்சி உண்டாகுமல்லவா? வனாந்தரத்திலே இஸ்மவேல் தண்ணீர் தவனத்தினால் சாகவிருக்கும்போது ஆண்டவர் ஆகாரின் கண்களைத் திறந்தார். அவள் ஒரு தண்ணீர் துரவை கண்டு எடுத்தாள். துரவைக் கண்டுபிடித்ததும் அந்த கண்டுபிடிக்கப்பட்ட துரவில் எத்தனை மகிழ்ச்சியோடு தண்ணீரை மொண்டிருப்பாள். அந்த துரவின் தண்ணீர் பிள்ளைக்கு ஜீவனைக் கொடுத்தது. ஜீவதண்ணீராம் இயேசுதான் நமக்கு இரட்சிப்பின் ஊற்று. அவர் கொடுக்கும் இரட்சிப்பை மகிழ்ச்சியோடே மொண்டு கொள்ளுவோம். இஸ்ரவேலருக்கு கன்மலையை மோசேயை அடிக்கச் சொல்லி தண்ணீரை ஆண்டவர் கொடுத்தார் (எண் 21.16) ஜனங்களைக் கூடிவரச் செய்து அவர்களுக்குத் தண்ணீரைக் கொடுப்பேன் என்று சொல்லி ஊற்றைத் தோண்டச் சொன்னார். ஜனங்களுக்கு நியாயப் பிரமாணிக்கனும், அதிபதிகளும், மேன்மக்களும் ஒரு மனப்பட்டு கிணற்றைத் தோண்டினபோது ஊற்றுத் தண்ணீர் பொங்கி வந்தது. மகிழ்ச்சியோடே தோண்டப்பட்ட ஊற்றுகளிலிருந்து மொண்டு கொண்டார்கள். மகிழ்ச்சியோடே பாடல் பாடினார்கள். தாவீது பெத்லகேமின் ஒலி முகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர் மேல் ஆவல் கொண்டது மெய்தான். ஆனால் தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்து பராக்கிரமசாலிகள் அவன் கையில் கொடுத்தபோது கர்த்தருக்கென்று அதை ஊற்றிப்போட்டு, ஊற்றப்பட்ட ஒரு ஊற்றை உண்டாக்கிய பெயரை எடுத்தான் (2 சா 23.15-17). மேலும் பாவத்தையும் அழுக்கையும் நீக்க தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டு. இதை அறிந்திருக்கிறோமோ? இன்றைக்கு சிலுவையில் தன் சரீரத்தை திறக்கப்பட்ட ஊற்றாக திறந்து கொடுக்க இயேசுவின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்வோம். மகிழ்ச்சியோடே திறக்கப்பட்ட இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மொண்டு கொள்வோமாக. ஆமென்.

ஜெபம்: ஜீவதண்ணீராகிய எங்கள் ஜீவ ஊற்றே, ஜீவதண்ணீரால் என் தாகம் தீரும். மகிழ்ச்சியைத்தாரும். என்னை ஆசீர்வதியும். ஆமென்.

 

Download Name Play Size Length
download Oct16Meditations Is 12.3G

0.4 MB 2:32 min