Wed January 17, 2018

அனுதின மன்னா - Mar1

 



 

தியானம்

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டட நாளில் நடந்தது போலவே உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன் (மீகா 7:15)

பிரியமானவர்களே!இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாளில் நடந்த அதிசயம் யாத் 12:35,36ல் காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடம் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். அவர்கள் கேட்டதை அவர்களுக்கு கொடுத்தார்கள். இந்தக் காரியத்தை தேவன் ஆபிரகாமுக்கு முன்னறிவித்தார். (ஆதி 15:14) மோசேயிடத்தில் தனது நாமத்தை அறிவித்து அனுப்பும் போதும் இதை முன்னறிவித்தார். (யாத் 3:21,22) எனக்கன்புக்குரியவர்களே இந்த வாக்குத்தத்தம் நமது பொருளாதரத்தை உயர்த்துகிற வாக்குத்தத்தம்.

ஒரு விசை ஒரு தம்பதியர் தங்கள் குழந்தையோடு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுடனே பேசி அவர்களுக்கு ஜெபிக்கும் போது உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன் என்று ஆசீர்வதித்து அனுப்பினோம். ஊருக்கு சென்றவுடனே அவருடைய வேலை போயிற்று. அதிசயங்களைக் காணப் பண்ணுவேன் என்று ஜெபித்தாரே வேலை பறிபோயிற்றே என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார். ஆனால் நடந்தது என்ன, சில நாட்களில் ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து ஒரு வேலைக்கு அழைப்பு வந்தது, சென்று ஒரு வருடம் உழைத்து சம்பாதித்து அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டு தாயகம் திரும்பினார். தென் மாவட்டத்தில் ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார். கர்த்தர் அதிசயத்தின் மேல் அதிசயங்களை செய்து வருகிறார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வேதம் சொல்லுகிறது அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவருடைய வியாபாரச் சம்பந்தமான Letter Head, Lables போன்ற எல்லாவற்றிலும் உன்னை அதிசயங்களை காணப் பண்ணுவேன் என்று எழுதப்பட்டிருக்கிறது. உன் பழைய வாழ்க்கையை விட்டு புறப்படுகிற நாளிலே கர்த்தர் உங்களை அதிசயங்களைக் காணச் செய்வார். கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள்.

ஜெபம்: ஆண்டவரே உம்முடைய நாமம் அதிசயம். அதிசயமானவர் ஆகையால் அதிசயத்தை செய்வது உமக்கு லேசான காரியம் எங்களையும் ஆசீர்வதியும். ஆமென்.

 


Download Name Play Size Length
download Mar01Meditations Mic 7.15J

0.8 MB 4:54 min